கொலை மிரட்டல் சூழ்ச்சி அம்பலம்: முன்னாள் அரசியல்வாதிகளை குறிவைத்த பிரியந்த ஜெயக்கொடி
முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையின் முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களுக்கு பின்னால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி இருந்துள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
பிரியந்த ஜெயக்கொடி, குற்றப் புலனாய்வுத் துறையில் (சி.ஐ.டி) தாக்கல் செய்த பொய்யான முறைப்பாடு தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சி.ஐ.டி) கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஹல்பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகக் கூறி அவர் இந்த பொய்யான முறைப்பாட்டை அளித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த காவல்துறைமா அதிபர் எஸ். பத்திநாயக்க மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளுக்கு கெஹெல் பத்தர பத்மே என்று வேடமிட்டு கொலை மிரட்டல் விடுத்தது, பிரியந்த ஜெயக்கொடியின் அறிவுறுத்தலின் பேரில் மற்றொரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதை குற்றப் புலனாய்வுத் துறை இப்போது வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முழு செயல்முறைக்கும் பின்னால் பிரியந்த ஜெயக்கொடியின் ஈடுபாட்டை அவர் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் பிரியந்த ஜெயக்கொடி ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, குறித்த காவல்துறை அதிகாரி, ஏதேனும் அரசியல் நோக்கத்தின் கீழ் இந்த போலி கொலை மிரட்டல் சதியை மேற்கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
you may like this
