வெளிநாடு ஒன்றுடன் ஆரம்பிக்கப்படும் புதிய நேரடி விமான சேவை
இலங்கை (Sri Lanka) மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான (Pakistan) நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக பாகிஸ்தானுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன (Ravindra Wijegunaratna) தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாகிஸ்தானின் தனியார் விமான சேவை நிறுவனமான எயார் சியலால் குறித்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள், தற்போது பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் ஆகிய பகுதிகளுக்கான சேவையை மாத்திரம் வழங்குவதாக பாகிஸ்தானுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அமைச்சரவை அனுமதி
இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து, கொழும்புக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க அந்த நாட்டின் தனியார் விமான சேவை நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை தொடர்பான குறித்த தனியார் விமான சேவை நிறுவனத்தின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு பேச்சுக்கள்
சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கிடையில் இந்த புதிய விமான சேவை தொடர்பான இருதரப்பு பேச்சுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன கூறியுள்ளார்.
அத்துடன், இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்