சிறிலங்காவிற்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் மற்றொரு நாடு
Bandaranaike International Airport
Nimal Siripala De Silva
Israel
By Beulah
இஸ்ரேலிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான நேரடி பயணிகள் விமான சேவை, எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இரண்டு நாடுகளின் சிவில் விமான சேவை அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இஸ்ரேலின் அர்கியா விமான சேவை.

இதேவேளை இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து கட்டுநாயக்க வரை நேரடி பயணிகள் விமான சேவைகள் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
சிறிலங்காவிற்கான இந்த சேவைகளை இஸ்ரேலின் அர்கியா (Arkia) விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் முன்னெடுக்கவுள்ளன.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.