எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள நேரடி வாய்ப்பு
srilanka
police
dilum amunugama
graduate
By Sumithiran
எதிர்காலத்தில் தலைமை காவல்துறை ஆய்வாளர் பதவிகளில் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்க ஒரு முறை வகுக்கப்பட்டு வருவதாக சமூக காவல்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தற்போது உதவி காவல் கண்காணிப்பாளர் பதவிகளுக்கு மட்டுமே பட்டதாரிகள் நேரடியாக சேர்க்கப்படுகிறார்கள். இது தொடர்பான முன்மொழிவு ஏற்கனவே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தலைமை காவல்துறை ஆய்வாளர் பதவிக்கு நியமிக்கப்படும்போது பட்டதாரிகள் பொதுமக்களுடன் அவர்கள் செய்யும் கடமைகள் குறித்து கணிசமான அளவிலான புரிதலைப் பெற முடியும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு தான் இந்த திட்டத்தை முன்வைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி