ஆலய திருவிழாவில் நிகழ்ந்த அனர்த்தம் - பரிதாபகரமாக பலியான இளைஞன்
Vavuniya
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
ஆலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியா - எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய திருவிழாவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவு இடம்பெற்ற பூசையின் போது
இந்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற பூசையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரை இளைஞன் எடுத்துள்ளார். இதன் போது வயரில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கை பட்டதை அடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் 29 வயது மதிக்கத்தக்க நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
இளைஞரின் சடலம்
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி