இந்த வார இறுதியில் பேரழிவு: காலனின் வருகையை எச்சரிக்கும் காலப்பயணி
இந்த வார இறுதியில், இயற்கைப் பேரழிவு ஒன்றினால் ஒரு நகரமே அடித்துச் செல்லப்பட இருப்பதாக காலப் பயணி ஒருவர் திகில் கிளப்பும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தன்னை எதிர்காலத்திலிருந்து வந்ததாக கூறியுள்ள நிலையில் உலகில் நிகழவுள்ள அசாதாரண நிகழ்வுகள் குறித்த செய்திகளை குறிப்பிட்டு வருகிறார்.
அந்தவகையில் தன்னை, 2671ஆம் ஆண்டிலிருந்து பூமிக்கு வந்துள்ள காலப் பயணி என அழைத்துக்கொள்ளும் எனோ அல்ரிச் என்பவரே இந்த திகிலூட்டும் செய்தியைக் கூறியுள்ளார்.
பயங்கரமான சூறாவளி
அவர், 2024ஆம் ஆண்டில், நிலநடுக்கங்கள் முதலான பல்வேறு மோசமான விடயங்கள் நிகழ இருப்பதாக எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, இந்த வார இறுதியில், அதாவது, சரியாக பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி, அமெரிக்காவிலுள்ள ஹௌஸ்டோன் நகரத்தை பயங்கரமான சூறாவளி ஒன்று தாக்க இருப்பதாகவும், இதனால் அந்த முழு நகரமுமே அழித்துபோக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் விமர்சனம்
மேலும், மனித இனத்தின் வரலாற்றிலேயே அது மிக மோசமான சூறாவளியாக இருக்கும் என்றும் எனோ அல்ரிச் கூறியுள்ளார்.
இந்தநிலையில், சிலர் அவரை கேலி செய்தும், சிலர் காணொளி ஆதாரங்களைத் தருமாறும் சமூக ஊடகங்களில் கேட்க, இவர் நல்ல விடயங்களையே கூறமாட்டாரா, எல்லாமே மோசமான விடயங்களாகவே கூறுகிறாரே எனவும் சிலர் சமூக ஊடகங்களில் இவரை விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |