வவுனியாவில் இடம்பெற்ற அனர்த்தம் : மயிரிழையில் தப்பிய பெண்
வவுனியா(vavuniya)- குருமன்காடு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன்,முச்சக்கரவண்டிக்குள் இருந்த பெண் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இன்று (22.02) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மன்னார் வீதி, குருமன்காடு சந்திப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் முன்னால் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், அதில் முதிய பெண்மணி ஒருவரும் இருந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி ஓட்டம்
இதன்போது தனியார் மருத்துவமனை முன்பாக வீதியில் நின்ற மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்துள்ளது. மரம் முறிந்து விழுவதை அவதானித்த முதிய பெண்மணி, முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி ஓடியதால் பாதிப்புக்கள் இன்றி தப்பியுள்ளார்.
முழுமையாக சேதமடைந்த முச்சககர வண்டி
முச்சககர வண்டி மீது மரம் விழுந்ததால் முச்சக்கர வணடி முழுமையாக சேதமடைந்துள்ளது. பின்னர் மரத்தின் கொப்புகளை வெட்டி முச்சக்கர வண்டியை மீட்ட போதும் அது முழுமையாக சேதமடைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்