கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள் உடனடிபலன்
Healthy Food Recipes
Skin Care
Mysskin
Beauty
By Thulsi
தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து கருமையடைந்து காணப்படும்.
இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.
இந்த வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதும், உங்கள் முகம் பளிங்கு போல் மாறிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
செய்யும் முறைகள்
- முதலில் கழுவிய அரிசியை எடுத்து சுத்தமான பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதை 2-3 மணி நேரம் வரை ஊறவைத்துக் கொள்ளுங்கள் ஊறவைத்த அரிசி தண்ணீரை வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து அதை ஒரு போத்தலில் ஸ்பிரேய் பண்ணும் விதத்தில் மூடி வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 2 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
- ஒரு சுத்தமான பாத்திரத்தில் பசும்பாலை எடுத்து கொள்ளவும். முகத்தை கழுவிய பின்,ஒரு காட்டன் பஞ்சை எடுத்து பாலில் தோய்த்து சிறிய அழுத்தம் கொடுத்து பூசிக் கொள்ளவும். இக்கலவையை நன்றாக காயவையத்த பின்பு சுடுதண்ணரீல் முகத்தை கழுவுங்கள்.
- கஸ்தூரி மஞ்சள் சந்தனம் காய்ச்சாத பால் செய்முறை ஒரு கிண்ணத்தில் இந்த மூன்றையும் ஒன்றாக குழைத்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள் பின் அதை முகத்தில் அப்ளை செய்யவும்.
சரும கருமையை நீக்க உதவும்
- ஓட்ஸ் இது ஒரு நேச்சுரல் ஸ்கரப்பர். இந்த ஸ்கரப் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.
- வெள்ளரிக்காய் சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.
- கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
