அரச நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகள்: நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரச நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலுவைத் தொகையை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,"அரச நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வரித்தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த அரச வருமானம் இருந்தபோதிலும், நாடு இப்போது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இயங்குகின்றது.
மேல்முறையீட்டு உரிமை
நாட்டில் வரி நிலுவை உள்ளதென்பதை அரசு என்ற வகையில் தெளிவாக சொல்ல வேண்டும்.முதலாவது நமது நாட்டின் வரிச் சட்டத்தில் உள்ள மேல்முறையீட்டு உரிமை.இது உலக நாடுகளிலும் உள்ளது.
அரசு வரி செலுத்த சொன்னால், மொத்த மக்களுக்கும் சட்டத்தின் முன் சென்று மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு.
நிலுவை வரித் தொகை
அரசு சொன்னாலும் இதை செலுத்த முடியாது என்று நீதிமன்றம் நீதிமன்றமாக செல்லும் உரிமை மக்களுக்கு உள்ளது.அவ்வாறானவைகள் தான் இங்கு அதிகமாக உள்ளது.
இரண்டாவது அரச நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகள். நிலுவை வரித் தொகையை வசூலிக்கும் அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களும் இந்த சகாப்தம் அளவுக்கு வேறு எந்த சகாப்தத்திலும் செயற்படுத்தப்படவில்லை என நான் சொல்ல விரும்புகிறேன் என்றும்” குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |