கடன் முகாமைத்துவத்தில் சர்வதேச தலையீடு! வலியுறுத்தும் ஷெஹான் சேமசிங்க
உலகளாவிய கடன் முகாமைத்துவத்திற்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன் முகாமைத்துவ சவால்கள் மற்றும் தேவைப்படும் மாற்றம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மாநாடொன்றில் உரையாற்றும் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய கடன் சவால்கள் பலவகையானவை எனவும் அவை அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு சவால்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் நெருக்கடி
தற்போது உலகில் அபிவிருத்தி அடைந்து வரும் பல நாடுகள் கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நிலையில், உலகளாவிய கடனை நிர்வகிக்க சர்வதேச தலையீடு அத்தியாவசியமானது என ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், காலநிலை மாற்றத்தின் நிதி தாக்கம் ஒரு சவாலாக காணப்படுவதாகவும் காலநிலை தாக்கங்களை குறைப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் உலக நாடுகளுக்கு கணிசமான முதலீடு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கடன் அல்லாத முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்த ஷெஹான் சேமசிங்க, தனியார் மூலதனத்தை கவர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
Participated as a panelist of the discussion on "Challenges and Changes in the Sovereign Debt Management Landscape." on the sidelines of the 14th Debt Management Facility (DMF) Stakeholders Forum. Stated that Global debt challenges are multifaceted and have significant… pic.twitter.com/iyz1hsonTe
— Shehan Semasinghe (@ShehanSema) June 20, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |