மொட்டு தரப்பிலிருந்து எதிர்கட்சிகளுக்கு பறந்த கோரிக்கை
Sarath Weerasekara
Political Development
Current Political Scenario
By Shalini Balachandran
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் இவ்வாரம் கூடவுள்ள நிலையில், கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச விடுத்த அழைப்பு குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் குழு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சுமார் 700 வரையான உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் சமகால அரசியல் செயற்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பெயர் பட்டியல் அடிப்படையிலான உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.
மாநகர சபை
கொழும்பு மாநகர சபையில் தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்திக்கு அடுத்தபடியான உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளது.

சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியும்.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
பலமான எதிர்க்கட்சி
இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் வலியுறுத்துவேன்.
பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாத காரணத்தால் தான் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.
பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாவிடின் பலமான அரச நிர்வாகமே தோற்றம் பெறும்.
அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவான கொள்கை அடிப்படையில் செயற்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி