நூறு அடி பள்ளத்தில் கவிழந்த பேருந்து: காவல்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு
ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 35 கையடக்கத் தொலைபேசிகள் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.
காவல்துறை பரிசோதகர்
இந்நிலையில், பேருந்தில் இருந்த பயணிகளின் பயணப் பொதிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய பொருட்கள் கொத்மலை காவல்நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென கொத்மலை காவல்நிலைய பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் வஜிர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் பிரதேச மக்களின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்ட 35 கையடக்க தொலைபேசிகளும் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் பிரதான காவல்துறை பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து நடந்த நேரத்தில் எத்தனை பயணிகள் இருந்தார்கள் என்பதை சரியாகக் கூற முடியாது, ஏனெனில் பேருந்து சாரதி இறந்துவிட்டார், நடத்துனர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர். உண்மையான பௌத்தராக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தியிருக்க நேர்ந்திராது என்ற தலைவர் பிரபாகரன்…!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
