இலங்கையில் கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி அட்டைகள்?
பொது இடங்களுக்குள் நுழையும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் (Dr Hemantha Herath) தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இதை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதைப் பார்ப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
இது ஒரே இரவில் எடுக்கக்கூடிய முடிவு அல்ல. இறுதி முடிவை எடுப்பதற்கு முன் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சட்ட சாத்தியக்கூறுகள், இதை நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் மக்களின் உரிமை போன்ற காரணிகள் ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.
இந்த காரணிகள் சரியான முறையில் கவனிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டால் தான், எதிர்காலத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.