தீபாவளி லைட்அப் மற்றும் உற்சவம் 2025: ஒற்றுமையும் ஒளியுமாய் லிட்டில் இந்தியா!
லிட்டில் இந்தியா வட்டாரம் நேற்று இரவு மின்னும் விளக்குகளாலும் வண்ணமயமான நிகழ்ச்சிகளாலும் ஒளிர்ந்தது.
ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளி லைட்அப் & உற்சவம் 2025 நிகழ்ச்சியை லிஷா (Little India Shopkeepers & Heritage Association) பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தது.
இவ்வாண்டு கொண்டாட்டம், ஒளிக் கொண்டாட்டமாகிய தீபாவளியையும், சிங்கப்பூரின் 60 ஆம் ஆண்டு விழாவையும் சிறப்பிக்கும் விதமாக நடைபெற்றது.
ஒளி மற்றும் அழகின் விருந்தகம்
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்” எனும் கருப்பொருளோடு, சுமார் 2 கிலோமீட்டர் நீளத்தில் பரந்து விரிந்த சிராங்கூன் சாலையில், 42 அலங்கார வளைவுகள் மற்றும் 6 இலட்சத்துக்கும் அதிகமான எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இவ்விளக்குகள் ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் புதுப்பிறப்பின் சின்னமாகக் காட்சியளித்தன. தலைவர்கள் மற்றும் சமூக ஒற்றுமை இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், “ஒவ்வொரு பண்டிகையையும் பன்முகக் கலாசாரக் கொண்டாட்டமாகக் கருதி, ஒன்றுபட்டுக் கொண்டாடுவதுதான் சிங்கப்பூரின் வழிமுறை” என வலியுறுத்தினார்.
உற்சவ ஊர்வலத்தின் சிறப்பு நீண்ட காலத்திற்கு பிறகு, உற்சவம் சாலை அணிவகுப்பு மீண்டும் இடம்பெற்றது.25 சமூக மற்றும் கலை அமைப்புகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
பிக் பஸ் டூர்
லிஷா தீபாவளி உற்சவம் 2025-இன் பகுதியாக, இந்த ஆண்டின் மிகப் பிரத்யேகமான அனுபவங்களில் ஒன்றாக ‘பிக் பஸ் டூர்’ இடம்பெற்றது.

இந்த ஆண்டு, தீபாவளி உற்சவம் மேலும் சிறப்பு பெற்றதற்கு முக்கிய காரணம் 6 இலட்சம் LED விளக்குகள் மின்னும் பிரகாசமான தெரு அலங்காரம், பாரம்பரியம், கலாசாரம், கலை மற்றும் சமூக ஒற்றுமையை ஒருங்கே கொண்டுவரும் பல்வகை திட்டங்களின் வெற்றியான அணிவகுப்பாகும்.
லீஷா தீபாவளி உற்சவம்-2025 கொண்டாட்டங்களின் முக்கிய பகுதியாக அமைந்த தீபாவளி பண்டிகை கிராமம் லிட்டில் இந்தியாவின் இதயத்திலேயே பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வணிக உற்சாகத்தை ஒன்றாகக் கூட்டி, தொடர்ச்சியாக பல நாட்கள் நடைபெற்ற ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது.
பண்டிகை கிராமத்தில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், நகைகள், ஆடைகள், இனிப்புகள், மசாலா பொருட்கள் மற்றும் பல்வேறு தீபாவளி தேவைகள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
உள்ளூர் மற்றும் சர்வேதச பார்வையாளர்கள் பெருமளவில் வருகைத் தந்து, அங்கே நடந்த கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உணவு சுவை அனுபவங்கைள மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.
காலா டின்னர்
லீஷா தீபாவளி உற்சவம்-2025 கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெற்ற காலா டின்னர் , சமூக தலைவர்கள், விருந்தினர்கள் மற்றும் கூட்டாளர் அமைப்புகைள ஒன்றிணைத்த ஒரு சிறப்பான விழாவாக அமைந்தது.

பாரம்பரிய இசை, கலாச்சார நிகழ்ச்சிகள், வாழ்த்துரை மற்றும் இணைப்புத் திட்டங்களால் நிரம்பிய இந்த நிகழ்வு, தீபாவளியின் ஒளி மற்றும் மகிழ்ச்சியை அழகாக பிரதிபலித்தது.
மொத்தத்தில், இந்த கோலா டின்னர் நிகழ்ச்சி கலாச்சாரம், பொழுதுபோக்கு மற்றும் சமூக இணைப்பை ஒருங்கிணைத்து, தீபாவளி உற்சவம் 2025–இன் மறக்கமுடியாத முக்கிய தருணங்களில் ஒன்றாக அமைந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |