மீண்டும் புயல்..! இலங்கையில் கொட்டப்போகும் பலத்த மழை…!
Sri Lanka
Weather
Rain
By Sumithiran
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு, குறிப்பாக கொழும்புக்கு, பலத்த மழை பெய்யும் என்று பிபிசி வானிலை முன்னறிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் மேகமூட்டம் இந்த வாரம் புயலாக உருவாகக்கூடும் என்று பிபிசி வானிலை ஆய்வாளரான லூயிஸ் லியர்(Louise Lear) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சில பகுதிகளில் தீவிர மழை
"புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரப் போகிறது. அது புயலாக மாறினாலும் இல்லாவிட்டாலும், திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் இலங்கையின் சில பகுதிகளில் தீவிர மழை பெய்யும்," என்று லூயிஸ் லியர் கூறினார்.

மழைக்கால வானிலை இலங்கையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அவ்வப்போது நாட்டில் சில நிலையற்ற கனமழை பெய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்