மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படவுள்ள 5 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள்
சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடுவதற்கான அட்டைகள் பற்றாக்குறையால் முன்னர் வழங்க முடியாத சுமார் 500,000 சாரதி அனுமதிப் பத்திரங்கள் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (Department of Motor Traffic) அறிவித்துள்ளது.
இந்த சாரதி அனுமதிப் பத்திரங்கள் தபால் திணைக்களம் வழியாக விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்
அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாததால் நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் இடைக்காலத்தில் வழங்கப்பட்டன.

தேவையான அட்டைகள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று இடங்களில் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள பிரதான அலுவலகத்திலும், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரத்தில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களிலும் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |