தடுப்பூசி அட்டை அவசியமா? சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்
சிறிலங்காவில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கும், வெளியே செல்வதற்கும் கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
தேவை ஏற்படும் பட்சத்தில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும். அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படமாட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.