சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமலை ஒப்பிட வேண்டாம் : கொந்தளிக்கும் பிமல்

Namal Rajapaksa Sirimavo Bandaranaike Dayasiri Jayasekara Bimal Rathnayake
By Sathangani Nov 23, 2026 07:04 AM GMT
Report

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமல் ராஜபக்‌சவை ஒப்பிட வேண்டாம் எனவும் அவ்வாறு ஒப்பிடுவது சிறிமாவோ பண்டாரநாயக்கவை அவமதிப்பதாகும் எனவும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காகவே நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்

விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்

குரல் கொடுக்கும் சஜித் பிரேமதாச  

அவர் மேலும் தெரிவிக்கையில், தனிப்பட்ட வெறுப்பை முன்னிலைப்படுத்தியே எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமலை ஒப்பிட வேண்டாம் : கொந்தளிக்கும் பிமல் | Do Not Compare Namal With Sirimavo Bandaranaike

ராஜபக்‌சர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ஊழல் மோசடிக்காக சிறைக்குச் சென்றுள்ள நாமல் ராஜபக்‌சவுக்காக குரல் கொடுக்கிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினரை சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்கிறார். அரசியல் இலாபத்துக்காக தயாசிறி ஜயசேகர இந்தளவுக்கு செல்லக்கூடாது.

யாழில் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்ட பலாலி வீதி : வெளியான முக்கிய அறிவிப்பு

யாழில் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்ட பலாலி வீதி : வெளியான முக்கிய அறிவிப்பு

 

தயாசிறி விளங்கிக் கொள்ள வேண்டும்

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமல் ராஜபக்‌சவை ஒப்பிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு ஒப்பிடுவது சிறிமாவோ பண்டாரநாயக்கவை அவமதிப்பதாகும். அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காகவே நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டுள்ளார்.  

சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமலை ஒப்பிட வேண்டாம் : கொந்தளிக்கும் பிமல் | Do Not Compare Namal With Sirimavo Bandaranaike

எயார்பஸ் கொள்வனவில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை, கிரிஸ் கொடுக்கல் வாங்கலில் 75 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு அமையவே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.  

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை. அதற்கமைய அவருக்கு குடியுரிமையை நீக்கும் பிரேரணை கொண்டு வரப்படவில்லை என்பதை தயாசிறி விளங்கிக் கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.  

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : கல்வி பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : கல்வி பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026