பட்டம் ஏற்ற விதிக்கப்பட்டது தடை -மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Hambantota
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
By Sumithiran
ஹம்பாந்தோட்டை - பொல்பிட்டிய உயர் அழுத்த மின் விநியோக பாதைக்கு அண்மித்த பகுதிகளில் பட்டம் பறக்கவிட வேண்டாம் என இலங்கை மின்சார சபை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹம்பாந்தோட்டை - பொல்பிட்டிய 220 கிலோவாற்ஸ் உயர் மின்னழுத்த மின் கடத்தல் பாதையின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பட்டம் ஏற்ற வேண்டாம்

எனவே இந்தப்பகுதிகளில் பட்டம் பறக்க விடவேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலைய பகுதியிலும் பட்டம் ஏற்ற வேண்டாம் என அண்மையில் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்… 23 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி