பொய்யான அறிக்கைகளை வெளியிடாதீர் -அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
tourist
statements
false report
By Jaso
சுற்றுலாத்துறை தொடர்பாக பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொது சுகாதார பரிசோதகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டிற்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் இருப்பதை வலியுறுத்திய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுற்றுலாத் துறை மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அவர் மேலும் தெரிவித்தார்.