திடீரென காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை
புதிய இணைப்பு
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரின் சடலம் மஹியங்கனையில் உள்ள பகடாவேவ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைத்தியர் நேற்று (23.08.2026) வழமை போன்று பணியில் இருந்ததாகவும், அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருகையில்,
மருத்துவர் மாயம்
வைத்தியர் மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அவரது கார், மீகஹகியுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் 17ஆம் மைல் கல் அருகிலுள்ள மப்பக்கடை வேவப் பகுதியில், வைத்தியரின் கார் நேற்று இரவு கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, காணாமல் போன வைத்தியரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, காவல்துறையினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து இன்று (24.08.2026) குறித்த பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |