யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்
Jaffna
SL Protest
Jaffna Teaching Hospital
By Sathangani
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் (21) மதியம் 12 மணி முதல் 1 வரை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றிலுள்ள வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்