சுகாதார சேவையில் புதிதாக மருத்துவர்கள், தாதியர்கள் இணைவு - அமைச்சரின் அறிவிப்பு
Keheliya Rambukwella
Ministry of Health Sri Lanka
Hospitals in Sri Lanka
National Health Service
By Pakirathan
எதிர்வரும் இரண்டு வாரங்களில் சுகாதார சேவைக்கு புதிதாக 406 வைத்தியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதனை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
மருந்து விலைகள்
அதேசமயத்தில் வருகின்ற மாதத்தில் தாதியர் சேவைக்காக 2200 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை 16 வீதத்தால் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு 03 மாதங்களுக்கு ஒருமுறை மருந்து விலைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொிவித்துள்ளாா்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்