அதிகரிக்கும் நெருக்கடி -இலங்கையிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வேலை இழந்த நிலையில் தொழிலகளை தேடி வெளிநாடுகளுக்கு சென்ற வண்ணமுள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பது மாதங்களில் வெளியேறிய மருத்துவர்கள்
இந்த நிலையில் கடந்த 9 மாதங்களில் 500 வைத்தியர்களும் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக வைத்தியர்கள் பலர் நாட்டிலிருந்து வௌியேறி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்காமல் பயணம்
வௌியேறிய 500 வைத்தியர்களில் 60 பேர் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்காமல் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் விடுமுறை வழங்காமல் காலத்தை இழுத்தடிப்பதால் பல வைத்தியர்கள் சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்காமல் நாட்டை விட்டு வௌியேறும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.