பதுளை பொது வைத்தியசாலை மருத்துவர்களின் முன்மாதிரி
Sri Lanka
Hospitals in Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் நெருக்கடி
தற்போதைய கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளும் முடக்க நிலையை அடைந்துள்ளன.
குறிப்பாக சுகாதாரத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருளுக்கு முன்னுரிமை என்றபோதிலும் அவர்களும் பெரும் சிரமத்தியின் மத்தியிலேயே எரிபொருளை பெறுகின்றனர்.
துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் மருத்துவர்கள்
இந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையின் அனைத்து மருத்துவர்களும் துவிச்சக்கரவண்டி மற்றும் நடைபாதையில் பயணம் செய்து மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர்.
சிறுவர், சத்திரசிகிச்சை, புற்றுநோய், மகளிர், மகப்பேறு, நரம்பியல், இருதய, எலும்பு மூட்டு மற்றும் ஏனைய வைத்தியர்கள் எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இவ்வாறு துவிச்சக்கர வண்டிகளில் பணிபுரிய வருகின்றனர்.
மற்றொரு டொக்டர்கள் குழு நடந்தே வேலைக்கு வருகிறார்கள்.
