சாப்பாட்டை குறைப்பது உடல் எடையை குறைக்குமா
உடல் பருமன் அதிகரித்து விட்டதாக தெரிவித்து சாப்பாட்டை குறைப்பது, அல்லது விரதம் இருப்பது என்பது முழுக்க முழுக்க கட்டுக்கதை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
விரதம் இருப்பது பட்டினியாக இருப்பது ஆகியவை உடல் எடை குறைக்க உதவும் என்பது கட்டுக்கதை என்றும் பட்டினியாக இருப்பதாலும் சில உணவுகளை தவிர்ப்பதாலும் உடல் எடை குறையாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில நாட்கள் மட்டும் கட்டுப்பாடு
மேலும் சில நாட்கள் மட்டும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து விட்டு மீண்டும் அதே உணவுகளை உண்ண தொடங்குவதால் உடல் எடை மேற்கொண்டு அதிகரிக்க தான் செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்பயிற்சியே சிறந்த வழி
உடல் எடையை குறைப்பதற்கு சரியான உடற்பயிற்சி மற்றும் கலோரிகள் குறைவதற்கான உடற்பயிற்சியை தெரிவு செய்ய வேண்டும் என்றும் பட்டினி கிடப்பதும் விரதம் இருப்பதும் சாப்பாட்டை குறைத்து சாப்பிடுவதும் உடல் எடையை குறைக்க உதவாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
