பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள்
களுத்துறை - வாத்துவ, தல்பிட்டிய பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குச் சொந்தமான காணியில், பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி நாய்கள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த காணியில் ஒரே இடத்தில் 5 நாய்கள் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்சாரம் தாக்கியதில் நான்கு நாய்கள் உயிரிழந்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஹோட்டலின் எல்லைக்கு அருகில் மின்சாரம்
குறித்த ஹோட்டலின் எல்லைக்கு அருகில் மின்சாரம் பொருத்தப்பட்டதன் காரணமாக, நேற்று இரவு அந்த வளாகத்திற்குள் நுழைந்த நான்கு நாய்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர் .

விலங்குகளிடமிருந்து பயிர்கள் அல்லது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக எனக் கூறி, இவ்வாறு தரை மட்டத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சும் வகையில் கம்பிகளை அமைப்பது முற்றிலும் சட்டவிரோதமானதும், மிகவும் கொடூரமானதும் மனிதாபிமானமற்றதுமான செயற்பாடாகும்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாத்துவ காவல்துறை மற்றும் வாத்துவ சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோர் நாய்களின் மரணம் குறித்து சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening