டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (17) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 83 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபா 32 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 415 ரூபா 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348 ரூபாய் 75 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 363 ரூபாய் 88 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபாய் 16 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 14 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபாய் 11 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 217 ரூபாய் 46 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238 ரூபாய் 19 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 248 ரூபாய் 83 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.90 ரூபாயிலிருந்து 322.41 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 334.15 ரூபாயிலிருந்து 333.65 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.74 ரூபாயிலிருந்து 321.75 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333 ரூபாயிலிருந்து 332 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 323 ரூபாய் மற்றும் 333 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |