டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 55 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 74 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 403 ரூபா 87 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 420 ரூபா 02 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 365 ரூபாய் 72 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபாய் 31 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 245 ரூபாய் 27 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 47 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 52 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 250 ரூபாய் 52 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.66 ரூபாயிலிருந்து 322.90 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.50 ரூபாயிலிருந்து 332.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.24 ரூபாயிலிருந்து 322.49 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.25 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 324 ரூபாய் மற்றும் 334 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்