டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (01) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 23 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாய் 77 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 404 ரூபாய் 77 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 420 ரூபாய் 27 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபாய் 46 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 364 ரூபாய் 75 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 03 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 35 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 94 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபாய் 07 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 250 ரூபாய் 85 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.99 ரூபாயிலிருந்து 318.14 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 329.08 ரூபாயிலிருந்து 329.23 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.02 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 318.50 ரூபாய் மற்றும் 327.50ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |