டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 92 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 329 ரூபா 54 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 89 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 402 ரூபா 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 334 ரூபா 39 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 349 ரூபா 32 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 27 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபா 32 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 211 ரூபா 97 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 58 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கொள்முதல் பெறுமதி
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.18 ரூபாயிலிருந்து 316.67 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 329.37 ரூபாயிலிருந்து 329.88 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.68 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாயிலிருந்து 319.50 ரூபாய் மற்றும் 329 ரூபாயிலிருந்து 329.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.