வங்கிகளில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணய மாற்று வீதம்
நேற்றைய தினத்துடன் (07) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (08) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையாகவுள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.34 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 329.11 ரூபாய் ஆகவும் மாறாமலுள்ளது.
விற்பனை பெறுமதிகள்
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.24 ரூபாயிலிருந்து 314.73 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 325.50 ரூபாயிலிருந்து 326 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாயாக மாறாமலுள்ள வேளை விற்பனை பெறுமதி 328 ரூபாயிலிருந்து 327 ரூபாய் ஆக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 31 சதம் - விற்பனை பெறுமதி 327 ரூபா 99 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 394 ரூபா 22 சதம் - விற்பனை பெறுமதி 411 ரூபா 69 சதம்.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 52 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 69 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 98 சதம் - விற்பனை பெறுமதி 241 ரூபா 63 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 44 சதம் - விற்பனை பெறுமதி 211 ரூபா 50 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 68 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 04 சதம்.