டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
சென்ற வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (11) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.34 ரூபாயிலிருந்து 313.85 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 329.11 ரூபாயிலிருந்து 328.60 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது.
விற்பனை பெறுமதிகள்
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.73 ரூபாயிலிருந்து 314.24 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 326 ரூபாயிலிருந்து 325.50 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாய் மற்றும் 328 ரூபாய் ஆக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 29 சதம் - விற்பனை பெறுமதி 327 ரூபா 60 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபா 92 சதம் - விற்பனை பெறுமதி 411 ரூபா 21 சதம்.
கனடா டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 41 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 71 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 22 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 33 சதம் - விற்பனை பெறுமதி 212 ரூபா 16 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 68 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 00 சதம்.