தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : மத்திய வங்கி வெளியீடு
நேற்றைய தினத்துடன் (19) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (20) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.67 ரூபாயிலிருந்து 317.15 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 330.89 ரூபாயிலிருந்து 331.40 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது.
விற்பனைப் பெறுமதி
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.68 ரூபாயிலிருந்து 318.18 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது
அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாய் மற்றும் 329 ரூபாயாக மாற்றமடையாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 69 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 93 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபா 73 சதம் - விற்பனை பெறுமதி 410 ரூபா 55 சதம்.
யூரோ
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபா 98 சதம் - விற்பனை பெறுமதி 354 ரூபா 65 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 20 சதம் - விற்பனை பெறுமதி 246 ரூபா 87 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 05 சதம் - விற்பனை பெறுமதி 215 ரூபா 00 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 25 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 40 சதம்.