டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 89 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 32 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 408 ரூபா 11 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 423 ரூபா 82 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349 ரூபாய் 62 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 364 ரூபாய் 03 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237 ரூபாய் 37 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 248 ரூபாய் 00 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 67 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 08 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபாய் 57 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 251 ரூபாய் 20 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.41 ரூபாயிலிருந்து 322.17 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333.65 ரூபாயிலிருந்து 333.39 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.99 ரூபாயிலிருந்து 321.75 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 332 ரூபாயாக மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 322 ரூபாய் மற்றும் 332 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |