ஊழியர் சேமலாப நிதியத்தின் வருமானத்தை குறைப்பது நியாயமற்றது : கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!
ஊழியர் சேமலாப நிதியத்தின், ஓய்வூதிய சேமிப்பின் மீதான வருமானத்தை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் சிண்டிகேடட் சர்வே கருத்துக்கணிப்பொன்றினை மேற்கொண்டுள்ளது.
இக்கருத்துக்கணிப்பு 2023 ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.
இதன்படி, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக, ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) ஓய்வூதிய சேமிப்பின் மீதான வருமானத்தை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவு அவசியமற்றது மற்றும் நியாயமான முறையில் செய்யப்படவில்லை என்று 77 சதவீதம் வயது வந்த இலங்கையர்கள் நினைக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு
இக்கணக்கெடுப்பின் படி,
இரண்டு கூற்றுகள் அவர்கள் இடையே வாசிக்கப்பட்டன. ஒவ்வொன்றுடனும் அவர்கள் உடன்படுகிறார்களா இல்லையா என்று கேட்கப்பட்டது.
- அதைச் செய்ய வேண்டியது அவசியம்.
- இது நியாயமான முறையில் செய்யப்பட்டது.
இது அவசியமானது மற்றும் நியாயமான முறையில் செய்யப்பட்டது என 10% மட்டுமே இரண்டு அறிக்கைகளையும் ஏற்றுக்கொண்டனர் . 13% க்கு இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் இல்லை அல்லது அவர்களுக்கு இதை பற்றி தெரியாது. பதிலளித்தவர்களில் 44% பேர் இரண்டு அறிக்கைகளுடனும் உடன்படவில்லை, 33% பேர் இரண்டில் ஒன்றை ஏற்கவில்லை. எனவே, ஒட்டுமொத்தமாக 77% பேர் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை அல்லது, அது நியாயமான முறையில் இது மேற்கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறார்கள்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு
2023 செப்டம்பரில் இலங்கை ஒரு தனித்துவமான உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை (DDR) பூர்த்தி செய்தது, இது உள்ளூர் நாணயக் கடன் மறுசீரமைப்புக்காக முறையான துறை ஊழியர்களின் சேமலாப நிதியத்தின் ஓய்வூதிய சேமிப்பின் மீதான வருமான வைப்பு நிதியை மட்டுமே இலக்காகக் கொண்டது.
வங்கி மற்றும் நிதித் துறை, தனியார் கடன் வழங்குபவர்கள் மற்றும் பெரும்பாலான அரச துறை ஊழியர்கள் இதிலிருந்து விலக்கப்பட்டனர்.
இலங்கையின் இந்த நடவடிக்கையானது உலக மட்டத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு புதிய முன்னுதாரணமாக அமைந்திருக்கலாம், மாறாக ஓய்வூதிய நிதி தொடர்பில் அனைவரையும் சமமாக நடத்துவதை விட ஒருவரையொருவர் வித்தியாசமாக நடத்தும் தீங்கான கொள்கையைப் பின்பற்றுவதையே இலங்கை இதில் செய்துள்ளது.
கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்
நாடளாவிய ரீதியில் தேசியளவில் வயது வந்த இலங்கையர்கள் 1,029 பேர் கொண்ட பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
95% நம்பக இடைவெளி மற்றும் 3% வழு எல்லையை உறுதிசெய்யும் வகையில் இதன் மாதிரி மற்றும் வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
வெரிட்டே ரிசர்ச் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு (Syndicated Surveys) கருவியின் ஒரு அங்கமாக இக்கருத்துக்கணிப்பு வாக்களிப்பு பங்காளியான வன்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடட்டினால் நடத்தப்பட்டது.
சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு கருவியானது இலங்கை மக்களின் உணர்வுகளை அளவிடுவதற்கான வாய்ப்பை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |