போலியான அறிக்கைகளை நம்ப வேண்டாம் - நிதர்சனம் நிறுவனம் பகிரங்க வேண்டுகோள்
நிதர்சனம் நிறுவனத்தின் பெயரில் அண்மைக்காலத்தில் வெளிவந்த அறிக்கைகள் யாவும் போலியானவை என்பதை நிதர்சனம் நிறுவனம் இன்று உறுதி செய்துள்ளது.
தற்போது நிதர்சனம் நிறுவனத்தின் பெயரில் போலி அறிக்கைகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன் உண்மைத் தன்மைகளை வெளிக்கொணரும் நோக்கில் நிதர்சனம் நிறுவனம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இவ்வாறான போலியான அறிக்கைகளை யாரும் நம்ப வேண்டாம் என நிதர்சனம் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிக்கை

இதேவேளை, கடந்த 24. 08. 2023 திகதி இடப்பட்டு பல சமூக ஊடகங்களில் நிதர்சனம் நிறுவனத்தின் பெயரில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களும், அவரின் துணைவியார் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பது சம்பந்தமாகவும் அவர்களை தாங்கள் நேரில் சந்தித்து உரையாடினோம் என்ற செய்தியுடன் கூடிய ஒரு அறிக்கை வெளிவந்திருப்பது தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நிதர்சனம் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிதர்சனம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை