பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தவேண்டாம் -உடன் நிறுத்த கோருகிறார் பிரதமர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இறுதிப் போரின் போது, அவர் உயிரிழந்துவிட்டாரென, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் அகிம்சை வழியிலும், ஆயுத வன்முறை வழியிலும் போரிட்ட தலைவர்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு. அதனால் அவர்கள் உயிரிழந்த பின்னரும் தங்கள் மனங்களில் உயிர் வாழ்கின்றனரென சிலர் கருதுகின்றனர்.
பிழைப்பு நடத்தும் தமிழ் தலைவர்கள்

ஆனால், பிரபாகரன் விடயத்தில் அது சற்று வேறுபாடாக இருக்கின்றது. இலங்கையில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்து, இலங்கையில் போரிட்டு மரணித்த அவரை வைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தமிழ்த் தலைவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.
பிரபாகரன் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.