முடிவிற்கு வருமா ரஷ்ய - உக்ரைன் போர்...! புடினுடன் ட்ரம்ப் முக்கிய பேச்சு
உக்ரைன்(ukraine) மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் (viadimir putin) பேசியுள்ளேன். போரில் உயிர் பலி ஏற்படுவதை அவரும் விரும்பவில்லை,'' என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (donald trump)கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பெப்ரவரியில் ரஷ்யா போரை தொடக்கியது. மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, இரு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியுடன் ட்ரம்ப் பேச்சு
சமீபத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ட்ரம்ப் பேசினார். அப்போது, 'அந்த நேரத்தில் நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்க விட்டிருக்க மாட்டேன்' என, அவர் கூறினார்.
போரை நிறுத்தும்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசிய போது ட்ரம்ப் கூறியுள்ளார். இல்லாவிட்டால், ரஷ்யா மீது பெரும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
புடினுடன் தொலைபேசியில் பேச்சு
இந்நிலையில், 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் ட்ரம்ப் கூறியுள்ளதாவது: புடினுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். போரை முடிவுக்கு கொண்டு வரும்படி கூறினேன்.
போரில் உயிர் பலி ஏற்படுவதை, தான் விரும்பவில்லை என்று புடின் என்னிடம் கூறினார். போரில் லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் நம் குழந்தைகள் போன்றவர்கள். இதற்கு மேலும் உயிர் பலி ஏற்படுவதை புடின் தடுத்து நிறுத்துவார் என்று நம்புகிறேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)