போஷாக்கு குறைபாடு உண்மையே -அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்
சரியான அறிக்கைகளை சமர்ப்பியுங்கள்
இலங்கையின் போசாக்கு குறைபாடு மற்றும் வறுமை குறித்து சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் தவறானவை எனில், அரசாங்க அதிகாரிகள் கணக்கெடுப்புகளை நடத்தி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதனை தெரிவிக்கும் நிறுவனங்களை குறைகூறுவதில் அர்த்தமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இன்று (5) தெரிவித்துள்ளார்.
பசி, போசாக்கின்மை மற்றும் கடும் வறுமையின் உச்சிக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைப்பதில்லை என டிலான் பெரேரா தெரிவித்தார்.
கிராமத்திற்கு சென்றால் உண்மையை அறியலாம்
கிராமத்திற்கு சென்ற போது தன்னால் இவற்றை தெளிவாக காண முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சர் சர்வதேச அமைப்பு மற்றும் உள்ளூர் நிபுணர்கள் முன்வைக்கும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (5) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.