சட்டவிரோத காவல்துறை மா அதிபருடன் நாடு எப்படி முன்னேறும் : விமல் வீரவன்ச கேள்வி
நாட்டின் சட்டம் ஒழுங்குடன் விளையாட வேண்டாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று(8) நாடாளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸிடம் விமல் வீரவன்ச கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாரிடம் அதிகாரம்
மேலும் உரையாற்றிய அவர், காவல்துறைமா அதிபரின் நீடிப்பு அரசியலமைப்புச் சபையினால் அங்கீகரிக்கப்படவில்லை.
அரசியலமைப்புச் சபையினால் அங்கீகரிக்கப்படாத காவல்துறைமா அதிபருக்கு எவ்வாறு பதவி நீடிப்பு வழங்க முடியும்?
எனக்குத் தெரிந்தவரை அரசியல் நிர்ணய சபை தான் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நாட்டின் அதிபருக்கு காவல்துறைமா அதிபரை நியமிக்கும் அதிகாரம் உண்டு.
ஆனால், அதை அங்கீகரிக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சபையிடமே இருக்கிறது.
சட்டவிரோத காவல்துறை மா அதிபருடன் எமது நாடு எவ்வாறு முன்னோக்கிச் செல்ல முடியும்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.