சிக்கிய டக்ளஸ்..! யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: சிறிநேசன் எம்.பி
வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று (31) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் நடந்த படுகொலைகள்
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை எதிர்க்கட்சிகள் அரசியல் பழிவாங்கல் என்று கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை.
கிழக்கில் நடந்த படுகொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும்.
எனவே, இவ்வாறான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் பழிவாங்கலாகக் கருதவில்லை.
மட்டக்களப்புக்கான புகையிரத சேவை தற்போது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பயணிகளின் நலன் கருதி இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |