அரசாங்கத்திற்கு எதிராக போராட தயார் -டக்ளஸ் பகிரங்க அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் எதிர்த்தால் அரசாங்கத்திற்கு எதிராக நான் போராடுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் கிளிநொச்சியில் கிராம மட்ட அமைப்புகள் பொது அமைப்புகளுடன் சந்திப்பொன்றை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் மேற்கொண்டிருந்தார். இதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது ஊடகங்கள் செய்தியை திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட றோலர் படகுகளை எமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் பாவிப்பார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று இந்திய மீனவர்கள் நாட்டு படகு மூலம் மீன்பிடிப்பில் ஈடுபடுவார்களாக இருந்தால் எமது நாட்டு எல்லைக்குள் வரும்போது பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உட்பிரவேசிக்க முடியுமென தெரிவித்தார் .
எனினும் இந்த முடிவுகள் தொடர்பாக இருதரப்பு மீனவர்களுடனான சந்திப்பின் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.