உடனடியாக நிறுத்துங்கள்- ஆணைக்குழுவின் செயற்பாடுகள் எவையும் இடம்பெறக் கூடாது; டக்ளஸ் திட்டவட்டம்!

kilinochchi douglas devananda zoom meeting land reforme commission
By Kalaimathy Sep 17, 2021 06:54 AM GMT
Report

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்ற போது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அத்துடன் பிரமனந்தானாறு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற காணி அடையாளப்டுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒப்புதல் இன்றி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் எவையும் இடம்பெறக் கூடாது என்றும் அமைச்சரினால் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று நடைபெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின் போதே, மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பிரமனந்தனாறு பிரதேசத்தில் எதுவித அறிவித்தலும் இன்றி, வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் காணிகள் அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, குறித்த பிரதேச செயலளார் திரு.பிருந்தாகரனினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதேபோன்ற செயற்பாடு கரைச்சிப் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இரணைமடுப் பகுதியிலும் இடம்பெறுவதாவும் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டபபட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ள புதிய சுற்றிக்கையின் பிரகாரம், வனப் பாதுகாப்பு, வனஜூவராசிகள் ஆகியவற்றின் திணைக்களங்களினால் காணிகள் புதிதாக அடையாளப்படுத்தப்படுகின்ற போது பிரதேச செயலாளர்களின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியுதுடன், பிரதேச செயலாளர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளும் வரையில், ஆரம்பிக்கப்பட்டுள்ள காணி அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துமாறு வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிக்கு தெரிவித்தார்.

இதேபோல், இவ்வாண்டு மே 31ம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், கிளிநொச்சி மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினர் புதிதாக காணிகள் எதனையும் யாருக்கும் வழங்குவதாக இருந்தால், மாவட்டச் செயலாளரின் அனுமதி பெறப்படவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கலந்துரையாடலில் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த அமைச்சரவைத் தீர்மானத்தை முறையாகப் பின்பற்றுமாறு காணி சீர்த்திருத்த ஆணைக்குழு யாழ் மாவட்டப் பணிப்பாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரைக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, ஆனைவிழுந்தான் கிராமத்தில் சுமார் 325 பயனாளிகள் இருக்கின்ற நிலையில், கடந்த காலங்களில் பிரதேச மக்களினால் விவசாரய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்ற சுமார் 300 ஏக்கர் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினரிடம் இதுவரையில் 40 ஏக்கர் காணிகள் மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளதாக கரைச்சிப் பிரதேச செயலாளரினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வனப் பாதுகாப்பு அதிகாரி, பிரதேச செயலாளரின் கோரிக்கை தமது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் கூடிய விரைவில் பொருத்தமான காணிகளை பிரதேச செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், இன்றைய கூட்டத்தின்போது, கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள அபிவிருததிக் கூட்டுறவுச் சங்கத்தின் போத்தலில் அடைக்கப்பட்ட உற்பத்திகளை தெரிவு செய்யப்பட்ட 10 இடங்களில் விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்குதவற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள், கரும்புத் தோட்டக் காணிகளில் நெற் செய்கை மேற்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்குதல் மற்றும் கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை ஒழுங்குபடுத்தல், இலங்கை போக்குவரத்துச் சபை அமைந்துள்ள பிரதேசத்தில் எரிபொருள் விற்பனை நிலையம் அமைப்பதற்கான அனுமதி வழங்கல் போன்ற பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டு ஆக்க்பூர்வமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குறித்த மெய்நிகர் கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் இணைப்பாளர் வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் கோ.றுசாங்கன், மேலதிக மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர்(காணி) , திட்டமிடல் பணிப்பாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் உள்ளிட்ட பல முக்கிய அலுவலர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024