இரத்துச் செய்யப்பட்ட டக்ளஸின் ஒப்பந்தம் : மீண்டும் கைமாறிய திக்கம் வடிசாலை
சுமார் முப்பது ஆண்டுகளாக இயங்காமலிருந்த திக்கம் வடிசாலை மீண்டும் வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியிடம் நேற்று(25) பிற்பகல் இரண்டு மணியளவில் கையளிக்கப்பட்டது .
கைதடி பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன், திக்கம் வடிசாலை வளாகத்தில் வைத்து பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் வடமராட்சி கொத்தணியிடம் உத்தியோகபூர்வமாக கடிதத்தை கையளித்தார்.
பலரும் கலந்து சிறப்பிப்பு
இந்நிகழ்வில் வடமராட்சி, தென்மராட்சி உட்பட யாழ். மாவட்டத்தின் பல்வேறு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள், கொத்தணிகள், ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர்கள், பணிப்பாளர்கள், பனை அபிவிருத்தி சபை பணிப்பாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தென்னிலங்கையிலுள்ள ஒருவருக்கு நீண்ட கால குத்தகை
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) காலத்தில் குறித்த திக்கம் வடிசாலை தென்னிலங்கையிலுள்ள ஒருவருக்கு நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட்டிருந்தது.
அவ் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டே வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

