ஜிகாத் அமைப்புகளின் இலக்காக மாறப்போகும் இலங்கை : எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
ஜிகாத் அமைப்புகளின் இலக்காக இலங்கையும்(srilanka) மாறலாமென முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக(champikaranawaka) குறிப்பிட்டார்.
இவ்வாறு ஜிகாதிகளின் இலக்காக இலங்கை மாறுவதற்கு முக்கிய காரணம் அநுர அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட இரகசியமான முறையிலான பாதுகாப்பு ஒப்பந்தமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலிகடாவாகப்போகும் இலங்கை
இந்தியா(india), பாகிஸ்தான்(pakistan) யுத்தம் மூண்டால் இலங்கை(srilanka) பலிகடாவாகலாம்.
இந்தியாவுடன் அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) செய்துள்ள திருட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக இலங்கை இந்தியாவின் பக்கம் நிற்கவேண்டும். இதனால் உலகில் உள்ள ஜிகாதிகளின் இலக்காக இலங்கை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை வெளிப்படுத்துங்கள்
நாட்டுப்பற்றுள்ள தலைவர் என்றால் அநுர குமார இலங்கை, இந்திய பாதுகாப்பு ஒப்பந்தந்தத்தை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
