அதிகாலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!
மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொன்றை (Dondra), கந்தற காவல் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தை இன்று (22-07-2026) அதிகாலையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிர விசாரணை
காரில் வந்த ஆயுதமேந்திய குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இத்தாக்குதலுக்கு அவர்கள் கைத்துப்பாக்கி (Pistol) ரக ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனப் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான வீடு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும், இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிவதற்கும் கந்தற காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |