முஸ்லிம் - புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது டக்ளஸ் திடீர் கரிசனை
Douglas Devananda
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Tamil diaspora
By Vanan
டக்ளஸின் திடீர் கரிசனை
தடைசெய்யப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் சார்பான அமைப்புக்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் சட்ட நியமங்களுக்கு உட்பட்டு சமூக நலத் திட்டங்களை மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டிருப்பின், அவற்றின் தடைகளை நீக்குவதன் மூலம், நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்தியை விரைவுபடுத்த திட்டம்

பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் இந்த விடயமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி