மயிலிட்டி துறைமுகத்தின் அவல நிலை: தீர்வு காணும் நடவடிக்கையில் டக்ளஸ்

Indian fishermen Jaffna Douglas Devananda Sri Lanka Sri Lanka Fisherman
By Shalini Balachandran Mar 30, 2024 08:40 AM GMT
Report

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த துறைமுகத்தில் தொடர்ந்துவரும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் இன்றையதினம்(30) மயிலிட்டி இறங்குதுறைப் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் தொழில் மேற்கொள்ளும் ரோலர் படகுகளும் மற்றும் மீன்பிடி படகுகளும் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பினும் நாளாந்தம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படகுகளுக்கு எரிபொருள் நிரப்புவதிலும் மற்றும் படகுகளை கரை சேர்ப்பதிலும் பல அசௌகரியங்களை உண்டு பண்ணி வருகின்றன.

ஒன்பது இலட்சம் ரூபா சம்பளம்! ரஷ்யாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

ஒன்பது இலட்சம் ரூபா சம்பளம்! ரஷ்யாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

இந்திய இழுவைப் படகு

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்துவருவதால் அவற்றை ஒழுங்குபடுத்தி கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இறங்குதுறையின் செயற்பாடுகளை இலகுபடுத்தி தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலிட்டி துறைமுகத்தின் அவல நிலை: தீர்வு காணும் நடவடிக்கையில் டக்ளஸ் | Douglas Visits Jaffna Fishermen For Boat Problems

அத்துடன் மயிலிட்டி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய இழுவைப் படகுகளாலும் துறைமுகத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னாள் போராளிகளை திரட்டி புதிய படையணி..! தனது நோக்கத்தை அறிவித்த கருணா

முன்னாள் போராளிகளை திரட்டி புதிய படையணி..! தனது நோக்கத்தை அறிவித்த கருணா

பொறிமுறை

நிலைமைகளை அவதானித்த அமைச்சர் அவ்வாறு தரித்து நிறுத்தப்பட்ட படகுகளை ஆழமான பகுதியில் நிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பாக தொழில் மற்றும் எரிபொருள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருகைதரும் படகுகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத விகையில் பொறிமுறையை வகுத்து தீர்வுகளை காணுமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகத்தின் அவல நிலை: தீர்வு காணும் நடவடிக்கையில் டக்ளஸ் | Douglas Visits Jaffna Fishermen For Boat Problems

இதேவேளை தடைசெய்யப்பட்ட சுருக்குவலை தொழில் நடவடிக்கைகளும் இப்பகுதியில் அதிகரித்து வருவதாகவும் அவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்திய அமைச்சர் அவ்வாறான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க கூடாதெனவும் அவ்வாறு செயற்படும் தரப்பினரை தடுப்பதுடன் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்: வெளிவரும் மகிழ்ச்சியான தகவல்கள்

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்: வெளிவரும் மகிழ்ச்சியான தகவல்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016