வைத்தியர் அர்ச்சுனா கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சாவக்கச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாஇராமநாதனுக்கு(Archuna) விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இன்று(3) நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக அழைத்து சென்றபோதே எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்றைய தினம் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
மன்னார் பொது வைத்தியசாலைக்கு நேற்றைய தினம்(2) இரவு நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில் வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |